வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரவிகரன் (Mp) அவர்கள் இன்றைய தினம் எமது Wecan manthai காரியலயத்திற்கு வருகை தந்தார்.
19th June, 2026
வணக்கம் எம் இனிய தமிழ் உறவுகளே
2026/06/19 வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரவிகரன் (Mp) அவர்கள் இன்றைய தினம் எமது Wecan manthai காரியலயத்திற்கு வருகை தந்தார். அவர் கடந்த வருடம் எமது நிர்வாகத்தை சந்திக்க வந்த போது எமது நிர்வாகத்திற்கு தேவையான அலுவலக தளபாடங்கள் கோரிக்கையை முன்வைத்திருந்தோம்.
எனவே அவ் கோரிக்கையை ஏற்று இவ் வருடத்தி பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மாந்தை மேற்கு பிரதேச செயலகம் ஊடாக 200000/= இரண்டு லட்சம் பெறுமதியான கதிரைகள் கிடைக்கப்பெற்றது. இன்றைய சந்திப்பில் எமது நிர்வாகம் , மற்றும் எம்மை சார்ந்திருக்கும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து தங்களுடைய முழுமையான கருத்துகளை தெரிவித்தார்கள். இவ் சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமான சந்திப்பாக முடிவுற்றது