18th August, 2026
வணக்கம் எம் இனிய உறவுகளே!
இன்று 2026/8/18 கனடாவில் வசிக்கும் ஆரியன் முருகதாஷ் அவர்களுடைய நிதி அனுசரனையில் 16வது அகவை பிறந்த நாள்.
இன்று திருகோணமலை குச்சவெளி மாற்றுத்திறனாளிகளுடைய அமைப்பில் இருக்கும் விசேடதேவையுடைய 18 கீழ் உள்ள பிள்ளைகளுக்கான சத்துமா 26 பேருக்கு தம்பி ஆரியன் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி மிகவும் சிறப்புடன் இவ் நிகழ்வை எமது திருமலை இணைப்பாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
தம்பி ஆரியன் அவர்களுடைய பிறந்த நாள் பரிசாக திருமலையில் ஏற்கனவே ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது. இவருடைய தந்தையார் Mr.முருகதாஷ் அவர்கள் இவ்வாறான பல வாழ்வாதாரம் உதவிகள் செய்து வருகின்றார். விசேடமாக மாற்றுத்திறனாளிகளுடைய வாழ்வாதாரம்,கல்வி,மருத்துவம், உபகரணங்கள் WeCan manthai ஊடகா வட,கிழக்கு மாகாணங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.
மீண்டும தம்பி ஆரியன் நீண்டகால உடல்நல ஆரோக்கியமாக வாழ இதயபூர்வமான இணையும் கரங்கள் சார்பான வாழ்துகின்றோம். தங்களுடைய குடும்பத்தாருக்கும் இறையருள் கிடைக்கப்பெற பிராத்திக்கின்றோம்.நன்றி.வாழ்க வளர்க