31st July, 2026
வணக்கம் எம் இனிய தமிழ் உறவுகளே!
2026/07/31 கிழக்குமாகணம் திருகோணமலை,மட்டக்களப்பு மூன்று மாவட்டத்திலுள்ள முள்ளம் வடம் தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான சக்கர நாற்காலி வழங்கி வைத்தோம்.
மொரட்டுவ பல்கலைக்கழக பழைய தமிழ் மாணவர் ஒன்றியம்- கனடா அமைப்பின் நிதி ஆதரவுடன ,Wecan Maanthai ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் வழங்கி வைத்தேன். இவ் அமைப்பானது எம்மோடு இணைந்து இவ் புனித பணியை சிறப்பாக செயல்படுத்துவதற்கான அமைப்பை அறிமுகப்படுத்திய அன்புக்கும் மதிப்புகுரிய Mr.முருகதாஷன் தம்பிராசா அவர்களுடைய மனிதநேய மிக்க புனிதத்தை வெளிப்படுத்தியுள்ளது. எனவே அவருடன் இணைந்த அனைத்து அன்பாளர்களுக்கும் இணையும் கரங்கள் சார்பான எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாவட்ட ரீதியாக வழங்கப்பட உள்ள விபரங்களையும் பதிவேற்றம் செய்துள்ளேன். நன்றி.வாழ்க வளர்க வளமுடன்.
சிறப்பு குறிப்பு,Wecan அமைப்பு வட,கிழக்கு இரு மாகாணங்களில் தன்னுடைய சேவையை மாற்றுத்திறனாளிகளுக்கான மனிதநேய மிக்க புனித பணியை முன்னெடுத்து வருகின்றது.