Loading...
 
இன்று கனடாவிலிருந்து வருகை தந்த அன்புநெறி அன்பாளர்கள் இருவர் Mr.Ramanan and Mr.vindhan WeCan Office காலையில் வருகை தந்தார்கள்.

28th July, 2026

வணக்கம் எம் இனிய தமிழ் உறவுகளே!

2026/07/28 இன்று கனடாவிலிருந்து வருகை தந்த அன்புநெறி அன்பாளர்கள் இருவர் Mr.Ramanan and Mr.vindhan WeCan Office காலையில் வருகை தந்தார்கள்.

விசேடமாக இருவருக்கும் 50வது பிறந்த நாள் எமது WeCan அமைப்பின் நிர்வாகம் பிறந்த நாளை சிறப்பாக கேக் வெட்டி இரு உறவுகளையும் மகிழ்வித்தது. அத்தோடு எமது மாற்றுத்திறனாளிகளுடைய வாழ்வாதார உதவிகளும். விரிவாக கலந்துரையாடினோம்.1) கல்வி

2) பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கான மேலதிகமான வகுப்புக்கள்

3) ஆசிரியர்களின் கொடுப்பணவு

4) நீண்ட தூரம் நடந்து சென்று கல்வியை தொடரும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்குதல்.

5)WeCan 5ஏக்கர் பன்னை பராமரிப்பதற்கு 2 பேருக்கான சம்பளம். இவ்வாறான முக்கியமான விடையங்கள் தொடர்பாக விரிவாக உள்வாங்கப்பட்டது.

5)விசேட தேவையுடை பிள்ளைகளுக்காக முன்னெடுக்கப்படுகின்றன சத்துமா திட்டத்தையும் கூறியுள்ளேன்.

விசேட சந்திப்பாக மன்னார் மாவட்ட இயங்கி வரும் முன்னால் போராளிகள் அமைப்பின் தலைவர் Mr.தென்றல்மாறன் தலைமையில் தங்களுடைய அமைப்பின் உறுப்பினர்களுக்கான வாழ்வாதார உதவிகளை செய்து தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டு கலந்துரையாப்பட்டது.இறுயில் WeCan அமைப்பூடாக செயல்படுத்த படும் வேலைகள் பார்வையிட்டார்கள். இன்றைய சந்திப்பு நல்லபடியாக அமைந்தது.நன்றி வாழ்க வளமுடன்.