Loading...
 
அன்பு நெறி அமெரிக்கா அமைப்பின் நிதி ஆனுசரனையுடன் WeCan ஊடாக சத்துமா வழங்கல்

7th July, 2026

வணக்கம் எம் இனிய தமிழ் உறவுகளே

2026/07/07 இன்றைய நாளில் அன்பு நெறி அமெரிக்கா அமைப்பின் நிதி ஆனுசரனையுடன் WeCan ஊடாக சத்துமா வழங்கள்,

இவ் வருடத்தின் முற்பகுதியில் 1ம் கட்டமாக சிறுவர் மாற்றுத்திறனாளிகள் பிள்ளைகளுக்கு 3மாதங்கள் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய சத்துமா திட்டம் அதன் தொடர்ச்சியான 2ம்கட்டமாக மீண்டும் 3 மாதங்கள் மன்னார் மாவட்ட 5 பிரதேச செயலக பிரிவுகளிலிருந்து எமது மாற்றுத்திறனாளிகள் அமைப்பூடாக தெரிவு செய்யப்பட்ட மிகவும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களிலிருந்து 90 பிள்ளைகளுக்கான சத்துமா பொதிகளை வழங்கி இன்று ஆரம்பித்து வைத்தேன்.

எனவே இவ் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துமாறு அன்புநெறி நிர்வாக அன்பாளர்களிடம் கேட்டுள்ளேன். இவ்வாறான சத்துமா திட்டத்தை நலிவடைந்த மாற்றுத்திறனாளிகள். பிள்ளைகளுகளுக்கு இக் குழமம் ஊடாக பல மனிதநேய மிக்க பல வகையான வாழ்வாதார உதவிகளை செய்து வருகின்றன எமது அமைப்புகளும் ஏனைய மாவட்டத்திலுள்ள விசேடதேவையுடைய பிள்ளைகளுக்கான கல்வி,மருத்துவம்,சத்துணவு திட்டங்களை விரிவு படுத்தி செயல்படுத்தி செய்வதற்கு முன்வருமாறு இக் கோரிக்கையை அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புநெறி அமெரிக்கா அன்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.நன்றி.

வாழ்க வளமுடன்.