Loading...
 
மாந்தை மேற்கு பிரதேச செயலக சமூக சேவை காரியலமும், Wecan நிர்வாகம், மற்றும் எமது சிறு குழக்களின் உறுப்பினர்களும் இணைந்து இவ் பயணம் அமைந்தது.

1st July, 2026

வணக்கம் எம் இனிய தமிழ் உறவுகளே.     

மாந்தை மேற்கு பிரதேச செயலக சமூக சேவை காரியலமும், Wecan நிர்வாகம், மற்றும் எமது சிறு குழக்களின் உறுப்பினர்களும் இணைந்து இவ் பயணம் அமைந்தது. சமூக சேவை உத்தியோகத்தர் Mr.தீசன் தலைமையில் எமது கள அனுபவ பகீர்வுக்காக பயணம் மன்னாரிலிருந்து திருகோணமலைக்கு சென்றோம். 

திருமலையில் 11 பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கிய மாவட்டம். அதில் ஒரு பிரதேச செயலக 47 கிராம சேவர்கள் உள்ளடக்கிய ஒரு மாற்றுத்திறனாளி அமைப்பின் நிர்வாகத்தை சந்தித்து அவர்களுடைய அனுபவ பகீர்வை நாம் பெற்றுக்கொண்டோம். WeCan manthai அமைப்பின் வளர்ச்சி தொடர்பாக விரிவாக கூறினோம். இவ் சந்திப்பை ஒழங்கு செய்த திருமலை நகர் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தருக்கு நன்றி.

இதை முடித்துக்கொண்டு திருக்கோணேஸ்வரம் ஆலையம் சென்று சிவன் அருள்பெற்றுக்கொண்டு நிலாவெளி கடற்கரை சென்று அங்கு எமது சந்தோஷமான நேரத்தை கழித்தோம். பின்பு இராணவத்தால் வைக்கப்பட்டிருக்கும் ஆயுத கண்காட்சியை பார்வையிட்டோம், அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பார்த்த போது 2009 முற்பட்ட காலமும், முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தமும் நினைவூட்டி சென்றது.

இவ் கள அனுபவ பகீர்வுக்காக நிதி ஆதரவு வழங்கிய வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் தனுஜா லுக்சாந்தன் மேடத்துக்கு WeCan manthai சார்பான மிக்க நன்றி இவ்வாறனா அனுபவ பகீர்வு பயணங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்க படவேண்டும். எம்மோடு இணைந்து கொண்ட உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றி.

வாழ்க வளர்க வளமுடன்.